சிங்கப்பூரில் தனது 4 பிள்ளைகள் மீது சுடுநீரை தெளித்த தாய்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!!

சிங்கப்பூரில் தனது 4 பிள்ளைகள் மீது சுடுநீரை தெளித்த தாய்!! நீதிமன்றத்தில் தீர்ப்பு!!

சிங்கப்பூரில் தனது குழந்தைகள் நால்வர் மீது சுடு தண்ணீரை ஊற்றிய 34 வயதுடைய தாயாருக்கு ஒன்றரை வருடம் நன்னடத்தை கண்காணிப்பு தண்டனை நேற்று (ஜனவரி 9) விதிக்கப்பட்டது.

குழந்தைகளில் ஒரு குழந்தை தனது பணத்தை திருடியதாக சந்தேகத்து அந்தப் பெண் அவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

நான்கு குழந்தைகளுக்கு ஒற்றைத் தாயாரான அவர் மனநல மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் ,மேலும் மனநல சிகிச்சைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

சமூக சேவை அமைப்பு அவருக்குத் தேவை என்று கருதும் ஆலோசனை திட்டங்களிலும் அவர் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணின் நன்னடத்தையை மறு ஆய்வு செய்யப்படும்.

நன்னடத்தை காலத்தில் அவரது நன்னடத்தையை உறுதி செய்வதற்காக அவரது சகோதரி $ 5,000 பிணைத் தொகையை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சம்பவம் நடந்த போது குழந்தைகளின் வயது 8,9,10,11 ஆக இருந்தது.

குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் அவர்களது அடையாளங்களை பாதுகாக்கும் விதமாக அந்தப் பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.

அந்தப் பெண் நன்னடத்தை உத்தரவின் நிபந்தனைகளை மீறக் கூடாது , அவர் அவ்வாறு மீறினால் நீதிமன்றத்தில் ஆஜராகி புதிய தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மாவட்ட நீதிபதி டான் ஜென் கூறினார்.