சிங்கப்பூர் : தாமான் ஜூரோங், சுவா சூ காங்கில் மறுவடிமைப்பு திட்டங்கள் நிறைவு!!

சிங்கப்பூர் : தாமான் ஜூரோங், சுவா சூ காங்கில் மறுவடிமைப்பு திட்டங்கள் நிறைவு!!

தாமான் ஜீரோங் மற்றும் சுவா சூ காங்கில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்றார் போல தெருக்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ள இரு சாலைகள் மறுசீரமைப்பு திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் எமி கோர் பேஸ்புக் பதிவு ஒன்றில் தாமான் ஜீரோங்கில் உள்ள பேரங்காடி நிலையம்,சந்தை மற்றும் உணவு நிலையம் ஆகியவற்றிற்கு இடையில் யுங் ஷெங் சாலையில் 18 மீட்டர் நீளமுள்ள பாதை நடந்து செல்லும் மக்களுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

பேரங்காடி நிலையத்திற்கும் உணவு நிலையத்திற்கும் இடையில் இருக்கும் கூரையில் இணைப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு குடியிருக்கும் மக்கள் ஓய்வெடுப்பதற்கும் அண்டை வீட்டார்களுடன் அமர்ந்து உரையாடுவதற்கும் ஏதுவாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு ஏதுவாக பேரங்காடிக்கு நடந்து செல்வதற்கு நடைபாதையும் மிதிவண்டியில் செல்வதற்கு ஏதுவாக சைக்கிள் ஓட்ட பாதையும் கூரையுள்ள இணைப்புப் பாதை அங்கு உருவாக்கப்பட்டுள்ளதாக டாக்டர் கோர் கூறினார்.

அதேபோல சூவா சூ காங் டெரசில், `சன் சைன் பிளேசுக்கு’ அருகில் 80 மீட்டர் நீளமுள்ள பாதை நடந்து செல்பவர்களுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அங்கு பொழுதுபோக்கு மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு மண்டபமும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டு திட்டங்களும் சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்தன.