ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!!

ஜேஜூ ஏர் விமான விபத்து எதனால் ஏற்பட்டது? கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்குழு அமைக்க ஒப்பந்தம்!!

ஜேஜூ ஏர் விமான விபத்து சென்ற வருடம் (2024) டிசம்பர் 29ஆம் தேதி அன்று தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அங்கிருந்த சுவரின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.

அந்த விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்ற காரணம் தெரியவில்லை.

 

தென்கொரியாவின் ஆளும் கட்சியும்,எதிர்க்கட்சியும் ஜேஜூ விமான விபத்து குறித்து விசாரணை நடத்த கூட்டு நாடாளுமன்றப் பணிக்குழு அமைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

பல வாரங்களாக அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜேஜூ ஏர் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.