கோவிட்-19 நோய் பரவல் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர். அதன் சுகாதார நெருக்கடி நிலையைக் குறித்து விவாதிக்கப்பட்டது.
நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வரலாமா என்பதைப் பற்றி விவாதித்தனர்.
இந்த விவாதத்தின் முடிவு எத்தகைய முடிவுக்கு வரும் என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை.
ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று ஆலோசகர்கள் கூறினர்.
கோவிட் -19 நோய் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் பல நாடுகள் களைத்துப் போய்விட்டதை நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் Tedros Ghebreyesus ஒப்புக்கொண்டார்.
நாடுகள் அதை விட்டு நகர்ந்து சென்று விடுவதற்கே விரும்புகின்றனர்.
ஆனால்,கோவிட்-19 இங்குதான் இருக்கும். நாடுகள் அதைச் சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் கோவிட்-19 நோய் பரவல் வேகமாக பரவி வருகிறது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலர் ஒன்று கூடியது. அதற்கு காரணமாக கூறப்படுகிறது.
மலேசியாவில் கோவிட்-19 நோய் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் சுமார் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான படுக்கைகள் நிரம்பிவிட்டன.
கோவிட்-19 நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் மக்கள் கட்டாயமாக ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மலேசியா அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
சிங்கப்பூரிலும் கடந்த இரண்டு வாரங்களில் கோவிட்-19 நோய் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சிங்கப்பூர் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதற்கு 7 மணி நேரம் காத்திருக்க நேரிடுவதாக அண்மையில் தெரியவந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கோவிட்-19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 10 விழுக்காடு அதிகரித்திருக்கிறது
இந்தோனேசியாவில் கோவிட்-19 நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்க கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.