சிங்கப்பூர் : வேலையிடத்தில் இந்திய ஊழியர் மரணம்!! பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்-MOM!!

சிங்கப்பூர் : வேலையிடத்தில் இந்திய ஊழியர் மரணம்!! பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்-MOM!!

சீனப் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் கூறியது.

ஜனவரி 2 ஆம் தேதி தெங்கா பகுதியில் உள்ள Plantation Edge I & II தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீட்டுக் கட்டுமான தளத்தில் 29 வயதுடைய இந்திய ஊழியர் மீது கான்கிரீட் மிக்சர் லாரியின் குழாய் அவரது நெஞ்சில் மோதியது.

அந்த ஊழியர் சம்பவம் நடந்த சமயத்தில் வார்ப்பு வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக மனிதவள அமைச்சகம் மற்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் கூறியிருந்தன.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மனிதவள அமைச்சகம் இவ்வாறு கூறியுள்ளது.

சீனப் புத்தாண்டு நெருங்கி வருவதால் சில திட்டங்களை நேரத்துடன் முடிப்பதற்கான அழுத்தத்தை எதிர்கொள்ளலாம்.

எனவே குத்தகைக்காரர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்புடன் செயல்படுமாறு மனிதவள அமைச்சகம் கேட்டுக்கொண்டது.