சிங்கப்பூரில் HMPV கிருமித்தொற்று நிலவரம்!!

சிங்கப்பூரில் HMPV கிருமித்தொற்று நிலவரம்!!

சிங்கப்பூரில் HMPV கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டின் ஆண்டிறுதியில் அதிகரித்துள்ளது.இதனை சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

அதற்கு சமூக ஒன்று கூட்டங்கள் மற்றும் விடுமுறை பயணங்கள் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் கூறியது.

சமூகத்தில் HMPV நோய்தொற்றின் வாராந்திர விகிதம் 0.8 சதவீதம் முதல் 9 சதவீதம் இருந்தது.

கடந்த டிசம்பரில் 5.5 சதவீதம் முதல் 9 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆண்டுகளிலும் இதே விகிதமே பதிவாகியிருந்தது.

அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இருமல் மற்றும் தும்மலின் போது மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இலேசான அறிகுறிகள் தென்பட்டால் வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இளம் பிள்ளைகள்,முதியவர்கள்,நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நோய்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.