Singapore News in Tamil

இதுவரை இல்லாத அளவு அமெரிக்காவில் உயர்ந்து வரும் வட்டி விகிதம்!

அமெரிக்கா மத்திய வங்கி இதுவரை இல்லாத அளவிற்கு அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

அது 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்த்தி உள்ளது.

மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தைக் கால் விழுக்காடு உயர்த்தியுள்ளது.

விலைவாசியை நிலைப்படுத்துவதற்காக அதன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

தற்போது,அந்த நடவடிக்கை இறுதியாக இருக்கும் என்று வங்கி கூறியது.

சொத்து, முதலீடு போன்றவற்றைக்கான தேவை குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.வட்டி விகிதத்தின் உயர்வால் குறைந்து வருவதாக கூறினார்.

இன்னும் அதிகமாக பண வீக்கம் இருப்பதாக மத்திய வங்கி தலைவர் Jerome Powell கூறினார்.

இவ்வாண்டு வட்டி விகிதம் குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இல்லை என்றும் கூறினார்.

சென்ற ஆண்டு விலைவாசி வேகமாக அதிகரிக்க தொடங்கியது.பல்லாண்டுகள் அமெரிக்காவில் காணாத அளவிற்கு உயர தொடங்கியது.அவ்வப்போது அமெரிக்கா மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது.

அதே நடைமுறையை பிரிட்டன், ஐரோப்பா நாடுகளின் மத்திய வங்கிகளும் பின்பற்றி வருகின்றன.