புக்கிட்தீமா வட்டாரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட சாலைத் துப்புரவு வாகனம்…!!!

புக்கிட்தீமா வட்டாரத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட சாலைத் துப்புரவு வாகனம்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தரை வீடுகள் அமைந்திருக்கும் பகுதிகளில் இந்த ஆண்டு (2025) சாலைத் துப்புரவு வாகனங்கள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது சுத்தம் செய்வதற்கு தேவையான நேரத்தை குறைக்கவும், மனிதவள தேவையை குறைக்கவும் உதவுகிறது.

இதுபோன்ற துப்புரவு வாகனங்கள் ஏற்கனவே 33 தனியார் வீட்டு மனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு மேலும் 12 குடியிருப்பு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுற்றுச்சூழல் வாரியம் இந்த செயல்முறையை 2019 இல் தொடங்கியது.

இந்த நடைமுறை சாலையின் மறுபக்கத்தில் வாகனத்தை நிறுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், குடியிருப்புவாசிகள் குறிப்பிட்ட நாட்களில் சாலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வாகனங்களை நிறுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இதன் மூலம் துப்புரவு வாகனங்கள் சாலையின் மறுபுறத்தில் எவ்வித இடையூறும் இன்றி தங்களது பணியை மேற்கொள்ள முடியும்.

அடுத்த திட்டமிடப்பட்ட துப்புரவு நாளில் குடியிருப்பாளர்கள் சாலையின் மறுபுறத்தில் நிறுத்துகின்றனர்.

துப்புரவு வாகனம் சாலையின் மறுபக்கத்தை சுத்தம் செய்யும்.

2019ஆம் ஆண்டுக்கு முன்னர், தனியார் தரை வீட்டுப் பகுதிச் சாலைகள் அனைத்தையும் துப்புரவு ஊழியர்களே தூய்மைப்படுத்தினர்.

இதற்கான துப்புரவு செய்யும் பணிகளும் சவாலாக இருந்ததாக கூறப்பட்டது.

வாகனங்களைப் பயன்படுத்தும் புதிய துப்புரவு முறையின்கீழ் சாலையைத் தூய்மையாக்குவதற்கான நேரம் 50 முதல் 80 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

புக்கிட் தீமா வட்டாரத்தின் மேஃபேர் பார்க் குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஜாலான் வாஜெக்கில் துப்புரவு பணிகளில் சாலைத் துப்புரவு வாகனங்கள் ஈடுபட்டிருக்கின்றன.

புக்கிட் திமாவின் மேஃபேர் பார்க் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஜலான் வாஜெக் கிட்டத்தட்ட 300 மீட்டர் நீளம் கொண்டது.

இந்தப் பகுதியை சாலையை சுத்தம் செய்யும் வாகனம் மூலம் சுத்தம் செய்ய சுமார் 20 நிமிடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. வாகனத்தை இயக்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பெரும்பாலான ஓட்டுநர்கள் ஆலோசனையில் தெரிவிக்கப்பட்ட குறிப்புகளை பின்பற்றி 60 முதல் 70 சதவீத மக்கள் சாலையில் சரியான பக்கத்தில் வாகனத்தை நிறுத்துவதால் துப்புரவு பணியாளர்கள் தங்களது வேலையை எளிதாக கையாள முடிகிறது.

Follow us on : click here ⬇️