பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!!

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!!

தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் கௌ சான் சாலைக்கு அருகே உள்ள எம்பர் ஹோட்டலில்(Ember hotel) கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது.ஆறு மாடிகள் கொண்ட அந்த ஹோட்டலில் ஐந்தாவது மாடியில் தீ முண்டது.அந்த ஹோட்டலில் மொத்தம் 75 பேர் இருந்ததாகவும், 35 பேர் மேல் கூரையின் வழியாக காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்கள் மூவரும் அமெரிக்கா பிரேசில் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று jiji press செய்தி நிறுவனம் வெளியிட்டது.

மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 ஜப்பானியர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த தகவலை பேங்காக்கில் உள்ள ஜப்பானிய தூதுரகம் தெரிவித்தது.