சிங்கப்பூரில் உள்ள காப்பி கடைகள், உணவு தயாரித்து விற்கும் நிறுவனங்கள்,உணவகங்கள் போன்ற உணவு கடைகளில் சோதனை நடத்தப்பட்டன.
சுமார் 400 உணவு கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த 2 மாதங்களில் உணவு கடைகள் மீது அதிரடி சோதனை நடத்தப்பட்டது.சுமார் 19 உணவு கடைகள் காலாவதியான உரிமங்களுடன் செயல்பட்டதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 14 கடைகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடைகள் நடத்துவோர் முறையான உரிமம் வைத்திருக்க வேண்டும்.
முறையான உரிமம் இல்லாமல் கடை நடத்துவோருக்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படலாம். அல்லது மூன்று மாதம் சிறைத் தண்டனை வரை விதிக்கப்படலாம். அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.
அனைத்து உணவுக் கடைகளும் வெளியில் தெரியும்படி உரிமத்தை வைக்க வேண்டியது கட்டாயம்.
பொதுமக்கள் உணவு கடைகளின் உரிமம் முறையானதா என்பதை QR குறியீடு மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.