சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்?

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்?

சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்ல ஆர்வமுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் அந்த எண்ணிக்கை ஒப்பிட்டு பார்த்தால் 20 சதவீதம் கூடியிருப்பதாக தெரிவித்தன .

சீனப் புத்தாண்டின் போது சீனாவுக்கு செல்ல பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.பண்டிகை காலங்களில் 20 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்,பிரபலமான இடங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் முதலிய காரணங்களும் உள்ளன.

கலாச்சாரக் கொண்டாட்டங்களை ரசிப்பதற்காக மக்கள் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு பெய்ஜிங்கிற்கு செல்வோரும் இருக்கதான் செய்கின்றனர் என்று Chan Brothers Travel நிறுவனம் கூறியது.

மேலும் ஆசிய நாடுகளை விட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல விரும்புவோர் அதிகம் என்று கூறப்பட்டது.