சிங்கப்பூரில் 2025 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மக்கள்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2025 புத்தாண்டு கொண்டாட்டமானது 23க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் கண்கவர் வானவேடிக்கை காட்சிகள், ட்ரோன் காட்சிகள் மற்றும் K-Pop நடனம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை மக்கள் அனுபவித்தனர்.
டிசம்பர் 31 இரவு, மெரினா பே, கலோங் பேசின் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வானவேடிக்கைகளைக் கண்டு மகிழ்ந்தனர்.
ஈசூனில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில், சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கலந்து கொண்டார்.
தெம்பனிஸ் ஹப்பில் சுமார் 3,000 பேர் ஒன்று கூடி கே-பாப் நடனமாடினர்.
குடியிருப்பு பகுதிகளில் 17 இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டது.
சிங்கப்பூர் தனது 60வது தேசிய தினத்தை இந்த ஆண்டு கொண்டாடுகிறது. இதற்கு SG 60 என்று பெயரிடப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் இது தொடங்கப்பட்டது.
பலர் தங்கள் வீடுகளுக்கு அருகில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, இரவு முழுவதும் வெடிக்கப்பட்ட வாணவேடிக்கைகளை மக்கள் கண்டு ரசித்தனர்.
Follow us on : click here