நேற்று (ஏப்ரல் 28-ஆம் தேதி) சிங்கப்பூரில் புதிய அம்சங்கள் அறிமுகம் கண்டது.கடல்துறை புதிய வழிகாட்டி நூலொன்றை பெற உள்ளது.
கடல்துறை ஊழியரணி பசுமை, மின்னியல் சார்ந்த திறன்களைக் கொண்டவர்களை ஈர்ப்பதற்காக அதனை பெறவிருக்கிறது.
கடல்துறை வேலைகளை வடிமைப்பதே அதன் நோக்கம்.
அதோடு இளநிலைப் பட்டத்துக்கு பிந்திய படிப்புக்கு உபகாரச்சம்பளமும் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.
புதிய தரநிலைக்கு ஏற்ப துறைகள் மாறிக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால், வர்த்தக ரீதியிலும், மனிதவள ரீதியிலும் பின்தங்கி விட நேரிட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கைக்கு இடையில் புதிய அறிவிப்பு வந்திருக்கிறது.
கடல்துறையை உருமாற்றுவதில் வாழ்நாள் கற்றலும், திறன் வளர்ச்சியும் முக்கிய பங்காற்றும் என்று போக்குவரத்து மூத்த துணையமைச்சர் Chee Hong Tang கூறினார்.
கடல்துறை நிறுவன ஊழியர்களுக்கு நல்ல வேலைகளை உருவாக்கித்தர உதவும்.அதேபோல்,அவர்களின் வாழ்க்கைத்தொழிலில் முன்னேற்ற பாதையையும் உருவாக்கித் தர உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.