விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்...!!! சிறுவனை அறைந்த ஆடவர் கைது!!
சிங்கப்பூர்: ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் வெஸ்ட்கேட் மால் விளையாட்டு மைதானத்தில் தனது குழந்தையை தள்ளிவிட்டதாகக் கூறி, ஆறு வயது சிறுவனை ஒருவர் அறைந்துள்ளார்.
இதனால் திடுக்கிட்ட சிறுவன் நிலைகுலைந்து போனான்.
சிறுவனின் தந்தை திரு.அலோய் சுவா, டிசம்பர் 22 அன்று யூலேண்ட் உட்புற விளையாட்டு மைதானத்தில் நடந்த சம்பவம் பற்றி ஸ்டாம்பிடம் கூறினார்.
அவருடைய மகன் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறு சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அது சிறுவர்களுக்குள் நடக்கும் சாதாரண சண்டை என்றும் விளையாட்டின் போது அவருடைய மகன் ஒரு குழந்தையை தள்ளிவிட்டான்.
அப்போது அந்தக் குழந்தையின் தந்தை சற்றும் யோசிக்காமல் தனது மகனின் முகத்தில் அறைந்ததாகக் கூறினார்.
இந்தச் செயல் அவரது மகனை உணர்ச்சி ரீதியாக பாதித்துள்ளதாகவும்,அவன் உடல் நடுங்கி பயந்து காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அந்த ஆடவர் தனது மகனை அறைந்ததால் அவனது சிறிய முகத்தில் தடம் பதிந்து சிவந்திருந்தது.
அப்போது அவனது கண்களில் கண்ணீர் வழிந்தது.என் மனைவி அவரிடம் கேட்டபோது, அந்த நபர் அறைந்ததை மறுத்துள்ளார்.
ஆனால், அந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் சிறுவனை அறைந்ததற்காக 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow us on : click here