Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!!

Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!!

தென் கொரியாவில் Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்டமாக நால்வரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன.

தென் கொரியப் போக்குவரத்துதுறை அமைச்சர் பார்க் சங் வூ இந்தத் தகவலை தெரிவித்தார்.

இதுவரை 28 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனையும் முடிந்துவிட்டது.

எஞ்சிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.

இந்த விபத்தில் ஒரு குடும்பம் 9 பேரை இழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அவர்களில் ஒருவர் விமானத்தில் பயணம் செய்த 78 வயதான ஆக முதியவர் என்று கூறப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) நடந்த இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர்.

விமான ஊழியர்கள் இருவர் மட்டுமே உயிர் தப்பினர்.

உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் சோல் உள்ளிட்ட பல இடங்களில் நினைவு பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பல குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களைப் பெறுவதற்காக இன்று முவான் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.