உணவு பிரியர்களே!! இது உங்களுக்கானது!! சிங்கப்பூரில் நாளை முதல் புதிய நடைமுறை!!
சிங்கப்பூரில் சில உணவு விநியோகச் செயலிகள் அடுத்த ஆண்டிலிருந்து (2025) கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
Foodpanda வாடிக்கையாளர்கள் நாளை முதல் (ஜனவரி 1) கூடுதலாக 20 காசு கொடுக்க வேண்டும்.
செயலியில் தற்போது 40 காசு கட்டணமாக செலுத்தப்படுகிறது . அது இனி 60 காசு என்பதை வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
GrabFood சேவையை வாடிக்கையாளர்கள் கூடுதலாக 20 காசு செலுத்த வேண்டும்.இந்த தகவலை ஏற்கனவே Grab நிறுவனம் தெரிவித்திருந்தது.
செலவுகளை ஈடுகட்ட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக நிறுவனங்கள் தெரிவித்தன.
நாளை (ஜனவரி 1) இணையத்தளச் சேவை ஊழியர் சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
இணையத்தள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு காப்பீடு எடுக்க வேண்டும். மேலும் இதனுடன் மத்திய சேமநிதிக் கணக்கில் சந்தா செலுத்த வேண்டும்.
Follow us on : click here