தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!!

தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!!

தென் கொரியாவில் சியோல் விமான நிலையத்திலிருந்து 161 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பியது.

அதில் இருந்த 161 பயணிகளும் பத்திரமாக வேறு ஒரு புதிய விமானத்தில் மாற்றப்பட்டனர்.

Jeju Air நிறுவனத்தின் விமானம் ஒன்று டிசம்பர் 29 ஆம் தேதி(நேற்று) Muan விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் 181 பேர் இருந்தனர்.

இந்த கோர விபத்தில் 179 பேர் பலியாகியுள்ளனர். இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இன்று இயந்திர கோளாறு ஏற்பட்ட விமானமும், விபத்துக்குள்ளான விமானமும் போயிங் 737 -800 ரக விமானங்களை சார்ந்தவை ஆகும்.

அனைத்து போயிங் 737-800 விமானங்களையும் சோதித்து பார்க்கப் போவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.