3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்வது குறித்த முடிவில் மாற்றமில்லை- சிங்போஸ்ட்

3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்வது குறித்த முடிவில் மாற்றமில்லை- சிங்போஸ்ட்

சிங்போஸ்ட் நிறுவனம் ஒரே நேரத்தில் மூன்று முக்கிய நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு ‘கவனமாக பரிசீலிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மூன்று மூத்த நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் அதன் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று சிங்போஸ்ட் கூறியது.

அதன் முடிவில் நம்பிக்கையாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்போஸ்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி வின்சென்ட் பாங், குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி வின்சென்ட் யிக் மற்றும் நிறுவனத்தின் சர்வதேச வணிகப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி லி யூ ஆகியோர் நீக்கப்பட்டனர்.

அவர்களில், திரு பாங் மற்றும் திரு யி ஆகியோர் பதவி நீக்கம் குறித்து வாதிடப் போவதாக கூறினர்.

நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

முக்கிய அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்ட மறுநாள் சிங்போஸ்ட் நிறுவனத்தின் பங்கு விலை சரிந்தது.

இதனால் பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, சிங்போஸ்ட் நேற்று (டிசம்பர் 29) ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது.

Follow us on : click here ⬇️