சிங்கப்பூரில் பொது மக்களுக்கு கூடுதல் வசதியை வழங்குவதற்காக புதிய அம்சம் ஒன்றை Singpass செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, அதில் அடையாள அட்டையையும்,வாகனம் ஓட்டும் உரிமம் அட்டையையும் மின்னிலக்க முறையில் பயன்படுத்த முடியும்.
தற்போது அச்சிடப்பட்ட CHAS அட்டைகளையும் அதில் பயன்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
சமூக, சுகாதார உதவி திட்டம் எனப்படும் CHAS க்கு தகுதி பெறும் சிங்கப்பூரர்களுக்கு வழங்க கூடியது.
அந்த அட்டையை இனி மின்னிலக்க வழியாகவும் பயன்படுத்தலாம்.
இன்று முதல் Singpass செயலியில் பயன்படுத்த நடைமுறைக்கு வருகிறது.
அந்த அட்டையை குறிப்பிட்ட பல் சுகாதார மருந்தகங்களிலும், பொது மருந்தகங்களிலும் பயன்படுத்தும்போது சலுகைகள் கிடைக்கும்.
பொது மக்களுக்கு உதவும் நோக்கில் அரசாங்கம் தற்போது அரசாங்க சேவைகளை மின்னலக்க முறையில் மாற்றப்படுகின்றன.