அமெரிக்காவின் 39 ஆவது பிரதமரான ஜிம்மி கார்ட்டர் காலமானார்...!!!
அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அவருக்கு 100 வயது.
முன்னாள் ஜனாதிபதி அவரது வீட்டில் பிற்பகல் 3:45 மணியளவில் இறந்ததாக அவரது மகன் சிப் கார்ட்டர் உறுதிப்படுத்தினார்.
திரு.கார்ட்டர் 1924 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தார்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திரு.கார்ட்டர், 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் அதிபராகப் பணியாற்றினார்.
மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதற்காகவும், உலக மோதல்களைச் சமாளிப்பதற்கான அவரது முயற்சிகளுக்காகவும் 2002 இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
திரு.கார்ட்டரின் குடும்பத்தினருக்கு பலரும் சமூக ஊடகங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Follow us on : click here