சிங்கப்பூரில் 15 வயதுடைய குழந்தை தனது நண்பர் வீட்டில் உறங்கிவிட்டு மறுநாள் மாலை 7 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.இந்த சம்பவம் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி நிகழ்ந்தது.
தாயாரின் பேச்சை மீறி தன் நண்பர் வீட்டில் தங்கி உள்ளார்.
மகள் வீட்டிற்கு வந்த பிறகு,அறைக்குள் சென்று கதவைப் பூட்டி கொண்டுள்ளார்.
அறையின் சன்னலை தாயார் திறந்துள்ளார்.மகளை கடுமையாக திட்டியும், சன்னல் வழியாக காலணிகளை வீசி மகள் மீது எறிந்துள்ளார்.
24-ஆம் தேதி வரை பூட்டிய அறைக்குள் இருந்து மகள் வெளிவர வில்லை. 24-ஆம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு எழுந்து வெளியே வந்துள்ளார்.
மகளிடம் ஒரு மணி நேரம் கழித்து தனக்கு சமையலறையில் உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
தாயுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.அப்பொழுது மகள் வீட்டுக்கு தாமதமாக வந்ததைச் சொல்லி திட்ட ஆரம்பித்தார்.
கோபத்துடன் இருந்த தாய் அங்கே இருந்த Kettle யை எடுத்து மகளை நோக்கி அசைத்துள்ளார். அதில் மகளுக்கு காயம் ஏற்பட்டு தோல் வெந்துபோய் கொப்பளங்கள் வந்தன.
அந்த 42 வயதுடைய தாய் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத்தில் அவருக்கு 3 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நினைப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.