ஆடம் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் இருவர் பலி..!!!

ஆடம் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் இருவர் பலி..!!!

சிங்கப்பூர்:ஆடம் சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் இரு முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 77 வயதான கார் ஓட்டுநரும் காரில் பயணித்த 72 வயதுடைய நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நேற்று (டிசம்பர் 28) மாலை 6 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

கார் தானாக சறுக்கியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

விபத்து குறித்து போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.