சிங்கப்பூரில் கோவிட்-19 நோய் தொற்றால் ஏற்பட்ட 61 வயதுடையவர் உயிரிழந்ததற்கு காரணம் பாரம்பரிய சீன மாத்திரைகளினால் ஒவ்வாமையாக என்று கூறப்படுகிறது.
ஜூலை 18-ஆம் தேதி 2022-ஆம் ஆண்டு கோ என்பவர் மயக்க கலக்கத்துடன் இருந்தார்.
மயக்க கலக்கத்துடன் காணப்பட்டதால் அவரை அவருடைய மகன் மருந்தகத்துக்கு அழைத்துச் சென்றார்.
மருந்தகத்துக்கு சென்று வந்த பிறகும் அவருக்கு சரியாகவில்லை.
அதனால் அவருக்கு ART பரிசோதனை செய்யப்பட்டது.பரிசோதனை முடிவில் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது.
அவர் 2 Panadol Extra மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளார்.
மறுநாள் காலையில் கோவிட்-19 பரிசோதனைச் செய்யப்பட்டது. அதில் அவருக்கு நோய் இருப்பது தெரியவந்தது.
ஜூலை 27-ஆம் தேதி 2022-ஆம் ஆண்டு Lianhua Jingwen Jiaonang இன் 4 மாத்திரைகளை எடுத்துக்கொண்டார்.
2022-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி இரவு இரண்டு மணியளவில் 2 Panadol மாத்திரைகளை உட்கொண்டார்.
இரண்டு மணி நேரம் கழித்து அவருக்கு உடல் அசதி ஏற்பட்டுள்ளது.அதோடு தொண்டை வலி இருந்ததனால் தெளிவாக பேச முடியவில்லை.
உடனே அவரை மருந்தகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஒவ்வாமை காரணமாக ஏற்பட்டதாக கூறினார்.
ஆனால்,கோ மருத்துவரின் ஆலோசனை இணங்கவில்லை.
அவரை மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினார். ஆனால், அதனை அவர் மறுத்தார்.
மறுநாள் மதிய வேளையில் கோ வுக்கு உடல்நிலை மோசம் அடைந்துள்ளது.உடனே அவரை டான் டொக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஜூலை 29-ஆம் தேதி தேசிய தொற்றுநோய் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் அங்கே உயிரிழந்தார்.