செக் குடியரசின் ஆண்டிறுதிக் கொண்டாட்டம்...!!!
உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆண்டு இறுதியை மகிழ்ச்சியுடன் கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் செக் குடியரசின் பாரம்பரிய நிகழ்வு ஆண்டுதோறும் அதன் தலைநகரான பிராகில் நகரில் உள்ள வல்ட்டவா ஆற்றில் நடைபெறுகிறது.
குளிர்காலத்தில் ஆற்று நீரின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.
உடலை உறைய வைக்கும் குளிர்ந்த நீரில் உலகெங்கிலுமுள்ள 360க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் நீந்திச் சென்றனர்.
100 மீட்டர், 300 மீட்டர், 750 மீட்டர் என 3 பிரிவுகள் உள்ளன.
வயது மற்றும் உடற்தகுதியின் அடிப்படையில் பங்கேற்பாளர்கள் தங்களுக்கு விருப்பமான பிரிவில் நீந்தலாம்.
பிராகில் புகழ்பெற்ற பொற்கொல்லரான அல்ஃப்ரெட் நிக்கோடெம்,1923 ஆம் ஆண்டு அந்த நதியில் இதேபோன்ற குளிர்காலத்தில் நீச்சலடித்தார்.
அவரது நினைவாக 78 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.
Follow us on : click here