நன்கொடைக்கு வழங்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணம்…!!!

நன்கொடைக்கு வழங்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணம்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த ஆண்டு (2023) பிற்பகுதியில் ஷெங் சியோங் FairPrice பேரங்காடியில் பிளாஸ்டிக் பைகளுக்காக வாடிக்கையாளர்கள் செலுத்திய மொத்தத் தொகை 2.44 மில்லியன் வெள்ளிக்கும்
அதிகம் என்று கூறப்படுகிறது.

அந்த தொகையில், 2.26 மில்லியன் வெள்ளிக்கு மேல் சமூக மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இரண்டு பேரங்காடிகளிலும் வாடிக்கையாளர்களால் பெறப்பட்ட மொத்த பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை சுமார் 49 மில்லியன் என்று கூறப்படுகிறது.

மறுசுழற்சி செய்யும் பழக்கத்தை ஊக்குவிக்க கடந்த ஆண்டு (2023) ஜூலை 3 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பைகளுக்குப் பணம் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் 50 காசுகள் வசூலிக்கப்படுகிறது.

பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வந்த பிறகு பிளாஸ்டிக் பைகளுக்கான தேவை 50 முதல் 80 சதவீதம் வரை குறைந்துள்ளதாக நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ இந்த ஆண்டு ஜனவரியில் தெரிவித்தார்.