சாலையில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி சென்ற நபர்!! ஒருமுறை அல்ல இருமுறை!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆபத்தான முறையில் வாகனமோட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
48 வயதான நபர் இரண்டு முறை இதே போன்ற தவறைச் செய்ததாக கூறப்படுகிறது.
காலாங்-பாயா லேபார் விரைவுச் சாலையில் நவம்பர் 18ஆம் தேதி அந்த நபர் ஆபத்தான முறையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
அதே நபர் நவம்பர் 27 ஆம் தேதி பாண்டன் பள்ளத்தாக்கில் ஆபத்தான முறையில் காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவர் சாலையில் வேகமாகச் சென்று இடைவிடாமல் வேகக் கட்டுப்பாட்டு பொத்தானை அழுத்திக்கொண்டே இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அவரின் இந்த செயல் மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
போக்குவரத்து போலீசார் அந்த நபரை அடையாளம் கண்டு கைது செய்ததோடு மட்டுமல்லாமல் வாகனம் ஓட்டுவதற்குத் தடையும் விதிக்கப்பட்டது.
சாலையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு $ 5,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
Follow us on : click here