Singapore Breaking News in Tamil

சிங்கப்பூரில் வரவிருக்கும் புதிய நடைமுறை!

சிங்கப்பூர் பொது போக்குவரத்து மன்றம் புதிய முறையை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.

பொது போக்குவரத்து கட்டணங்களைக் கணக்கிடுவதில் புதிய திருத்தத்தைக் கொண்டு வர உள்ளது.

இந்த புதிய நடைமுறையின் நோக்கம்.பொது மக்களுக்கு கட்டணங்கள் கட்டுப்படியாகும் வகையில் இருப்பதை உறுதி செய்வது, கட்டணங்கள் ஏற்றம்,இறக்கமாக இருப்பதைத் தவிர்ப்பது.

கட்டணத்தைக் கணக்கிடுவதற்காக புதிய கொள்ளளவு அறிமுகப்படுத்தப்படுகிறது.

ரயில், பேருந்துகளில் 2020 முதல் 2022 ஆண்டுகள் வரை எத்தனை பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்ற திட்டமிடல் கணக்கில் வருகிறது.

ஆண்டுக்கு 1.1 விழுக்காடு உயர்த்த திட்டமிடப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இதனை திட்டமிட்டுள்ளது.

ரயில்,பேருந்து கட்டணங்களைத் தீர்மானிப்பதற்கு சம்பள குறியீடு, பயனீட்டாளர் குறியீடு, எரிபொருள் குறியீடு முதலியவற்றின் மூலம் முடிவு எடுக்கப்படுகிறது.

கட்டணங்களில் கொண்டுவர உள்ள புதிய திருத்தம் இந்த ஆண்டு பிற்பாதியில் அறிவிக்கப்படும் என்று போக்குவரத்து மன்றம் தெரிவித்தது.