சிங்கப்பூர் : வீட்டில் யாரும் இல்லாதபோது ஏற்பட்ட தீ!!
தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 91 உள்ள பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 24 ஆம் தேதி இரவு 9:40 மணி அளவில் பிளாக் எண் 921 ல் முதல் தளத்தில் உள்ள வீட்டின் ஒரு அறையில் இருந்து புகை வெளியேறியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்ற போது அந்த வீட்டில் யாரும் இல்லை என்பது தெரிந்தது.
படுக்கை அறையில் மின்சார சைக்கிளின் பேட்டரி சார்ஜ் போடப்பட்டிருந்ததாகவும் அதன் மூலமாக மின்சாரம் கசிந்தது தான் தீ பற்றியதற்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இத்தகைய சம்பவங்கள் நேர்ந்திராமல் இருக்க மின்சாதனங்கள் மற்றும் மின்கலன்களை மின்னூட்டுவதையும், அதேபோல நீண்ட நேரத்திற்கு கவனிப்பின்றி மின்னூட்டிகள் இயங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை வலியுறுத்துகிறது.
மக்கள் தனி நபர் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் நடமாட்ட சாதனங்களுக்கு ஒரிஜினல் பேட்டரிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
Follow us on : click here