தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன 2 சிங்கப்பூரர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு…!!!

தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன 2 சிங்கப்பூரர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு...!!!

தைவானின் ஹுவாலியன் நகரில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிங்கப்பூரர்கள் இருவர் காணாமல் போயினர்.

தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தில் சிங்கப்பூரர்கள் இருவர் காணாமல் போயினர்.

அவர்கள் இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஹுவாலியன் மாவட்ட நீதிமன்றம் இருவரையும் கண்டுபிடிக்க முடியாததால் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தது.


இதனால் திரு.சிம் ஹுவீ கொக் மற்றும் திருவாட்டி நியோ சியூ சூ ஆகியோருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிலநடுக்கம் ஏற்பட்டதாக கருதப்படும் ஏப்ரல் 3 ஆம் தேதி பிற்பகலில் அவர்கள் இறந்ததாக சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரும் கடைசியாக காலை 7.20 மணியளவில் ஷாகடாங் வழித்தடத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன.

திரு.சிம்,திருவாட்டி நியோவின் உறவினர்கள் உடல்களைத் தேடும் பணி தொடரும் என நம்புவதாக தைவான் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.