சிங்கப்பூரில் விறுவிறுவென விற்றுத் தீர்ந்த அரையிறுதி போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் இடையேயான ஆசியான் சாம்பியன்ஸ் கோப்பையின் அரையிறுதிப் போட்டி நடைபெறும் நாளில் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என சிங்கப்பூர் கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
வியட்நாமில் நடைபெற உள்ள போட்டிக்கு சுமார் 300 டிக்கெட்டுகள் போட்டியன்று விற்பனை செய்யப்படும் என்று முன்பு கூறியிருந்தது.
வியட்நாம் கால்பந்து சங்கம் மூலம் அவை விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தது.
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள
சிங்கப்பூர் – வியட்நாம் இடையிலான கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை டிசம்பர் 22 ஆம் தேதி அன்று நடைபெற்றது.
ரசிகர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.
அவை முழுவதும் சுமார் 6 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன.
டிக்கெட்டுகள் 24 வெள்ளி முதல் 49 வெள்ளி வரை 3 பிரிவுகளில் விற்கப்பட்டன.
அரையிறுதியின் முதல் சுற்று நாளை (டிசம்பர் 26) ஜாலான் புசார் அரங்கில் நடைபெற உள்ளது.
இதற்கான டிக்கெட் விற்பனை இணையதளத்தில் இரட்டிப்பு விலையில் விற்கப்படுகின்றன.
மறுவிற்பனையாளர்களிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்க வேண்டாம் என சிங்கப்பூர் கால்பந்து சங்கம் எச்சரித்துள்ளது.
அப்படி வாங்கினால், மைதானத்துக்கான அனுமதி மறுக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.