கடலுக்கடியில் முக்குளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா...!!
கிறிஸ்துமஸ் தாத்தா என்றாலே சிறுவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்..
கொட்டும் பனியில் உலா வரும் கிறிஸ்துமஸ் தாத்தாவை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
ஆனால் கடலுக்கு அடியில் வலம் வரும் கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்ததுண்டா..??
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் உள்ள அக்வாரியம் மரைன் கடலடிக் காட்சியகத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவை காணலாம்.
சாண்டா கிளாஸ் கடலுக்கடியில் அவருக்கென உரிய பிரத்யேக ஆடையில் வலம் வருவார்.
பார்ப்பவரின் கண்களை கவரும் அழகில் காட்சி தருவார்..
சாண்டா கிளாஸ் சுவாசக் கருவியை அணிந்து கொண்டு தண்ணீரில் நீந்துகிறார்..
அவரைச் சுற்றி உலாவரும் வண்ண மீன்களுக்கு உணவளிக்கிறார்..
இதை காணும் சிறுவர்களுக்கு தனி சுவாரஸ்யம் என்றே சொல்லலாம்..
கடலோர காட்சியகத்தின் மீன் வளர்ப்பாளர்கள் அந்த மகிழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள்.
அவர்கள் கிறிஸ்துமஸ் நேரத்தில் சாண்டா கிளாஸாக மாறி பார்வையாளர்களுக்கு உற்சாகமளிக்கின்றனர்.
Follow us on : click here