சிங்கப்பூரில் கடந்த மார்ச் மாதம் 29-ஆம் தேதி முதல் இம்மாதம் 14-ஆம் தேதி வரை 451 கடைகளில் சிங்கப்பூர் உணவு அமைப்பு சோதனை களை நடத்தியது.
அதில் 43 உணவு கடைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அங்கு பணி புரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில் உணவகங்கள்,உணவங்காடி நிலையங்கள்,உணவங்காடிகள் முதலியவைகளும் அடங்கும்.
ஒரு சில கடைகள் மீது பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். ஆணையம் குறிப்பாக அவர்கள் புகார் அளித்த கடைகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறியது.
சோதனை நடத்தியதில் கடைகளில் உணவை கையாள்வோர் உணவுகள் மீது எச்சில் படாமல் இருப்பதற்கான முக கவசத்தை அணியாமல் இருந்துள்ளனர்.
கடைகளில் உடனடியாக உட்கொள்ளும் சமைத்த உணவை விற்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை மீண்டும் நினைவுப்படுத்தியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அதோடு அவர்களுடைய உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்துச் செய்யப்படலாம்.
பிப்ரவரியில் நோய் தொற்றுக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், உணவைக் கையாள்வோர் தொடர்ந்து முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவித்தது.