வாணவேடிக்கை நின்றதும்.. பிஞ்சுக் குழந்தையின் மூச்சும் நின்றது...!!!
சீனாவில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பல இணையவாசிகளை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தையின் இறுதி தருணங்கள் அடங்கிய காணொளி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
குய்ஸோ பகுதியைச் சேர்ந்த பெற்றோர்களின் ஒன்றரை வயது குழந்தையின் இதயத்தில் பல்வேறு இடங்களில் ஓட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
பெற்றோர் குழந்தையை காப்பாற்ற போராடினர்.
இதனால் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தனர்.
ஆனால் அறுவை சிகிச்சையின் போது குழந்தையின் இதயத் துடிப்பு பாதியிலேயே நின்றுவிட்டது.
அறுவை சிகிச்சைக்கு குழந்தை தாங்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறவே அதை ஏற்க முடியாமல் பெற்றோர் மனம் உடைந்தனர்.
கடந்த மாதம் 29ம் தேதி, குழந்தையின் முடிவு நெருங்குவதை உணர்ந்தனர். அப்போது வீட்டின் அருகே வாணவேடிக்கை வெடித்தது.
குழந்தையை மார்போடு அணைத்தபடி வாணவேடிக்கையை பெற்றோர் பார்த்தனர்.
வாணவேடிக்கையின் சத்தம் நின்றதும் குழந்தையின் உயிரும் நின்றது.
இணையத்தில் வெளியான இந்த காணொளியை கண்ட இணையவாசிகள் பெற்றோருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Follow us on : click here