Singapore Job Vacancy News

நியூசிலாந்தில் வடகிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.2 ரிக்டர் . இது வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டது.

நிலநடுக்கம் உள்ளூர் நிலவரப்படி நண்பகல் 12.42 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இது சுனாமி ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறதா என நியூசிலாந்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

அதுவரை வடகிழக்கு கடற்கரையை ஓட்டி வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவு விடப்பட்டுள்ளது.

வடகிழக்கு கடற்கரையில் இருந்து சுமார் 500 மைல் தூரத்தில் இருக்கும் Kermadec தீவில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் குறித்து இதுவரை தகவல் கிடைக்க வில்லை என Times Now செய்தி சொன்னது.