துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர்!! அப்படி என்ன செய்தார்?
இங்கிலாந்தின் வாரிங்டனில் முடி திருத்தம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் போலீஸ் அதிகாரிக்கு உதவியுள்ளார்.
32 வயதான கைல் வைட்டிங் என்பவர் முடி திருத்தம் ணி செய்து கொண்டிருந்தபோது போலீஸ் அதிகாரியுடன் ஒரு நபர் சண்டையிடுவதை ஜன்னல் வழியாக கண்டார்.
அவர் உடனடியாக கடையை விட்டு வெளியேறி போலீசாருக்கு உதவும் நோக்கில் அதிகாரியை தாக்கிய நபரை பிடித்துக் கொண்டார்.
வைட்டிங்கின் தோள் மீது முடி திருத்துபவர்
போர்த்தும் துணியோடு வந்து போலீசாருக்கு உதவினார்.
வைட்டிங்கின் உதவியுடன், அந்த அதிகாரி சந்தேக நபரைக் கைது செய்தார்.
அவரது சகோதரியும் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருவதால் அவரை நினைத்து அந்த போலீஸ் அதிகாரிக்கு உதவி செய்ததாக வைட்டிங் கூறினார்.
அவரது இந்தச் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Follow us on : click here