சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடியுரிமை இல்லா இளைஞர்களுக்கு சிங்கப்பூர் அரசானது குடியுரிமை வழங்கியுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் ரஃபிசுவான் செய்தியாளர்களிடம் குடியுரிமை அல்லாதோர் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் குடியுரிமை இல்லாத 25 வயது ரிக்கோ ரஃபிசுவான் சிங்கப்பூரில் நிரந்தரக் குடியுரிமை பெற்றுள்ளார்.
சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கான நீல நிற அடையாள அட்டை ரிக்கோ ரஃபிசுவானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரிக்கோ ரஃபிசுவான், “தான் அடையாள அட்டை பெற்றதை நம்ப முடியவில்லை என்றும் அடையாள அட்டை பெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை” என்று ஆனந்தக் கண்ணீருடன் பேசினார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் வெளியான ரிக்கோ ரஃபிசுவான் குறித்த செய்தியை படித்துவிட்டு ஒருவர் செயல்பாட்டுப் பிரிவு நிர்வாகியாக அவரை பணியில் அமர்த்தினார்.
நவம்பர் 4 ஆம் தேதி, திரு ரஃபிசுவான் பணியில் சேர்ந்தார்.
வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே, அவருக்கு சிங்கப்பூரில் நிரந்தரக் குடியுரிமை கிடைத்ததாக தகவல் வந்தது.
ரஃபிசுவான் வெளிநாடு செல்வதற்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.இதனால் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.