காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் தருணத்தில் நிகழ்ந்த சம்பவம்!!
காதலன் தன் காதலிக்கு காதலை பகிரும் தருணம் தனது கைத்தொலைபேசியை தவறவிட்டது டிக் டாக்கில் தற்போது வைரலாகி வருகிறது.
@Charliebullock17 என்ற கணக்கில் பகிரப்பட்ட அந்த காணொளியானது ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடப்பதை காட்டுகிறது.
காதலன் கைத்தொலைபேசியை சுவரில் நிமிர்ந்து வைத்துவிட்டு காதலியின் முன் மண்டியிடுகிறார்.
கையில் மோதிரத்தை வைத்து காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார்.
காதலியும் அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார்.
திடீரென கைபேசியின் திரையில் ஒரு கை தென்படுகிறது.
அவர் தொலைபேசியை எடுப்பது பதிவாகிறது.
இந்த காணொளியை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
@Charliebullock17 திருடனிடமிருந்து தொலைபேசியை திரும்பப் பெற்றதாக கூறியுள்ளார்.
@Charliebullock17, திருடன் கைத்தொலைபேசியை எடுத்த போது,அவரது காதலி அதை கவனித்ததாகக் கூறியுள்ளார்.
இதனால் அவர் திருடனை பிடித்ததாக தெரிவித்தார்.
திருடன் உடனடியாக கைத்தொலைபேசியை அவரிடம் ஒப்படைத்ததாகக் கூறினார்.
Follow us on : click here