பிரேசில் : நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து!! 38 பேர் பலி!!

பிரேசில் : நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து!! 38 பேர் பலி!!

பிரேசிலின் Minas Gerais மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கோர விபத்து நேர்ந்தது.இந்த விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளனர்.

17 ஆண்டுகளில் பிரேசிலின் நெடுஞ்சாலைகளில் நடந்த மோசமான விபத்து இது.

இந்த கோர விபத்தில் 45 பயணிகளுடன் பயணித்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

பேருந்தின் டயர் வெடித்து அதன் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த கனரக வாகனம் மீது அது மோதி விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் முதலில் கூறினர்.

ஆனால் கனரக வாகனத்தில் இருந்த சாலையில் விழுந்த கிரானைட் கல்லின் காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதை அடுத்து அதிகாரிகள் அவ்வாறு கூறினர்.

கனரக வாகனத்துடன் கார் ஒன்றும் மோதியது.அதன் அடியில் கார் சிக்கியது.காரில் இருந்த மூன்று பேரும் உயிர் தப்பினர்.

தடவியல் விசாரணை மூலம் இந்த விபத்துக்கான காரணம் கண்டறியப்படும் என்று வட்டாரத் தீயணைப்புத்துறை தெரிவித்தது.

கனரக வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார்.