2025 புத்தாண்டு அதிர்ஷ்டக் குழுக்களின் பரிசுத்தொகை எவ்வளவு..???

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புத்தாண்டு லக்கி டிராவில் 5 மில்லியன் வெள்ளி பரிசுத் தொகை உள்ளது.இந்த அறிவிப்பானது அதிர்ஷ்டச் சீட்டு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அதிர்ஷ்டக் குழுக்களின் முடிவுகள் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 3 ஆம் தேதி மத்திய சாலையில் அமைந்துள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கட்டிடத்தில் வெளியிடப்படும்.

இந்த தகவலை சிங்கப்பூர் பூல்ஸ் அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

லக்கி டிரா டிக்கெட்டுகளை இம்மாதம் 30ஆம் தேதி (டிசம்பர் 2024) மாலை 6.10 மணி முதல் வாங்கலாம் என தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் பூல்ஸ் விற்பனை நிலையங்களில் 10 வெள்ளி மற்றும் 20 வெள்ளி டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு சிங்கப்பூர் பூல்ஸ் இணையதளத்தை பார்வையிடலாம்.புத்தாண்டில் 5 மில்லியன் வெள்ளியை வெல்லப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.