ASEAN கோப்பைக் கால்பந்து போட்டி!! எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது?

ASEAN கோப்பைக் கால்பந்து போட்டி!! எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது?

சிங்கப்பூர்: ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு சிங்கப்பூர் தகுதி பெற்றது.

கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் அரங்கில் நேற்று இரவு சிங்கப்பூர், மலேசியாவை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான அந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் திரளாக குவிந்தனர்.

அரையிறுதியை அடைய மலேசியாவுக்கு எதிராக அதிர்ஷ்டவசமாக 0-0 என்ற கணக்கில் சமநிலையைப் பெற்றது.

இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால்
ஆட்டம் டிராவில் முடிந்தது.

அதன் மூலம் A பிரிவில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது.

2021 ஆசியான் கோப்பையின் அரையிறுதிக்கு சிங்கப்பூர் தகுதி பெற்றது.

பின்னர் அது இந்தோனேசியாவிடம் தோல்வியை தழுவியது.

2024 மலேசியாவுக்கு எதிராக கிட்டத்தட்ட 100 நிமிட தீவிர ஆட்டத்திற்குப் பிறகு சிங்கப்பூருக்கு அரை இறுதிக்கு முன்னேறியது.

சிங்கப்பூர் ஆசியான் சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிக்கு முன்னேறியது இது ஏழாவது முறையாகும்.

வீரர்களை அச்சமின்றி ஆர்வத்துடன் விளையாட ஊக்குவித்துள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.