NRIC அடையாள அட்டையை பயன்படுத்துவதில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் என்ன…???

NRIC அடையாள அட்டையை பயன்படுத்துவதில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம் என்ன...???

சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் அடையாள அட்டை (NRIC) எண்களைப் பயன்படுத்துவதைப் பற்றிய அவர்களின் சிந்தனையை மாற்றுமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

அடையாள அட்டை எண்களை கவனத்துடன் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது.

NRIC யின் கடைசி 3 எண்கள் மற்றும் ஒரு எழுத்தை மட்டுமே வெளியிடும் நடைமுறையை மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் மற்றும் மின்னணு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜோசபின் தியோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டில், மக்கள் தங்கள் NRIC இன் கடைசி 3 இலக்கங்களையும் ஒரு எழுத்தையும் மட்டுமே வெளியிடுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது.

NRICயின் கடைசி 3 எண்களையும் ஒரு எழுத்தையும் மட்டும் வெளியிடுவது பாதுகாப்பானது என்ற தவறான கருத்து உள்ளது.

ஒருவரின் பிறந்த ஆண்டு தெரிந்தால் முழு NRIC எங்களை யார் வேண்டுமானாலும் பெறலாம் இதனால் பயனர்கள் பாதிக்கப்படலாம்.

இது பாதுகாப்பானது அல்ல. ஒருவரின் அடையாள அட்டை எண்கள் வேறு யாருக்காவது தெரிந்தால் அது தவறாகப் பயன்படுத்தப்படலாம்.

ஒருவர் NRIC கார்டை தேவைப்படும் பயன்பாட்டின் போது காண்பிக்கலாம்.

இது பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும்.

NRIC அடையாள அட்டையில் எண்களுடன் ஒரு நபரின் புகைப்படம் மற்றும் கைரேகை உள்ளது.

ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த இதைப் பயன்படுத்தலாம்.

NRIC எண்களைக் கொண்டு மட்டும் பயன்படுத்தி ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாது.