இன்று இந்தியாவில் சிங்கப்பூரின் TeLEOS-2செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியாவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய 1-வது தளத்தில் இருந்து PSLV C-55 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இதனை இன்று மதியம் சரியாக 2.19 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்தது.
அதன்படி, நேற்று கவுண்டன் தொடங்கியது.சரியாக 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
சிங்கப்பூருடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிங்கப்பூரின் டெலியோஸ்-2 எனும் கண்காணிப்பு செயற்கைக்கோள் PSLV C-55 ராக்கெட் உடன் ஏவப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் செயற்கைக்கோள் மூலம் புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு என பல்வேறு தகவல்களைப் பெற முடியும்.