சட்டவிரோத பயணச் சேவை…!! பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்!!

சட்டவிரோத பயணச் சேவை...!! பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சட்டவிரோத பயண சேவைகளை வழங்கிய 12 ஓட்டுநர்கள் சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவுக்கான இருவழி பயணச் சேவைகளை வழங்கி வந்தது தெரியவந்தது.

இதனால் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபோன்ற சட்டவிரோத பயணச் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று
நிலப் போக்குவரத்து ஆணையம் கூறுகிறது.

இந்த சேவைகள் பாதுகாப்பற்றதாகவும்,சரியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததாகவும் இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

சட்டவிரோத பயணச் சேவைகளை வழங்கும் ஓட்டுநர்களுக்கு 3,000 வெள்ளி வரை அபராதம், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.