Singapore Breaking News in Tamil

சமூகத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு ஆதரவு அளிக்க நடத்தப்படும் Iftar!

இன்று உலகெங்கும் ரமடான் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு வருகிறார்கள்.

ரமடான் தினத்தையொட்டி சிங்கப்பூரில் இந்திய முஸ்லீம் சமூகச் சேவை சங்கம் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

வசதி குறைந்தவர்களுக்கும் ஆதரவு அளிப்பதற்காகவும் ,இளைஞர்களின் சமூக ஈடுபாட்டை அதிகரிப்பதற்காகவும் ஏற்பாடு செய்கிறது.

இச்சங்கம் சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தவும் இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் முயற்சி செய்து வருகிறது.

அதில்,`Harmony Iftar´ ஒன்று.

இச்சங்கம் அனைவருக்கும் ஆதரவு அளிப்பதற்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்கிறது.

குறிப்பாக சமுதாயத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு ஆதரவு அளித்து உதவுவதற்காக ஏற்பாடு செய்கிறது

தற்போது சிங்கப்பூரில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால்,சங்கம் இதனை மீண்டும் ஏற்பாடு செய்துள்ளது.

இச்சங்கம் இந்த ஆண்டு 8 iftars களை நடத்தியுள்ளது.

நேற்றுடன் நோன்பு மாதத்தின் 30-ஆம் நாள் நிறைவடைந்தது.நேற்று Iftar அன்-நஹ்டா பள்ளிவாசலில் மாலை 6 மணி முதல் 8.45 மணி வரை நடைபெற்றது.