எச்சரிக்கை…!!! அதிகரித்து வரும் இணைய மோசடிச் சம்பவங்கள்..!!!!

எச்சரிக்கை...!!! அதிகரித்து வரும் இணைய மோசடிச் சம்பவங்கள்..!!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையமான ஒன்மோட்டரிங் என்ற பெயரில் இணைய வழி குறுஞ்செய்தி மூலம் நடத்தப்படும் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு (2023) முதல் குறுஞ்செய்தி
அனுப்புநரின் அடையாள பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது.

எனவே நிலப் போக்குவரத்து ஆணையம் என்ற பெயரில் இணைய மோசடி நடப்பது கணிசமாக குறைந்துள்ளது.

ஆனால் தற்போது மோசடி செய்பவர்கள் மாற்று வழிகளில் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அல்லது OneMotoring என்ற பெயரில் இணைய வழி தகவல் அனுப்பும் சேவையின் மூலம் குறுஞ்செய்தியை அனுப்புகின்றனர்.

அவற்றில், கட்டணத்தை செலுத்துவதற்கான குறுகிய கால அவகாசம் மற்றும் போலி இணையதள முகவரியைக் குறிப்பிட்டுள்ளனர்.

அதை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் விவரங்களையும், டெபிட் கார்டு விவரங்களையும் இணையதளத்தில் பதிவிட்டனர்.

பின்னர் அவர்களது டெபிட் கார்டு மூலம் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இம்மாதம் (டிசம்பர்) 1ஆம் தேதி முதல் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பெயரில் 17 இணைய மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் சுமார் 33,000 வெள்ளி வரை இழந்துள்ளனர்.

குறுஞ்செய்திகள் வரும்போது நம்பகத்தன்மை உள்ளதா என்பதைச் சரிபார்க்குமாறு காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வங்கிக் கணக்கைப் பாதுகாக்கப் பயன்படும் 2FA போன்ற அம்சங்களை பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது.

ScamShield பயன்பாடு அல்லது இணையதளம் (www.scamshield.gov) இணைய மோசடிகளின் அறிகுறிகளைப் பற்றி அறிய வழிகாட்டுகிறது.