மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!!

மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!!

மும்பையில் கடற்படை கப்பல் ஒன்று பயணிகள் படகுடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

43 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக Times of India செய்தி இணையதளம் வெளியிட்டுள்ளது.

காணாமல் போன 7 வயது குழந்தையைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கபட்டது.

இந்த விபத்து மும்பை கடற்கரையில் நிகழ்ந்தது.

பயணிகள் படகு மீது மோதிய கடற்படை இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அதன் கட்டுப்பாட்டை இழந்ததாக இந்திய கடற்படை கூறியது.