சாங்கி விமான நிலையத்தில் கண்ணாடியைத் திருடி சொந்த கண்ணாடியை வைத்த பெண்!!

சாங்கி விமான நிலையத்தில் கண்ணாடியைத் திருடி சொந்த கண்ணாடியை வைத்த பெண்!!

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடையில் இருந்து கருப்பு கண்ணாடியைத் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி காவல்துறைக்கு தகவல் வந்ததாக தெரிவித்தது.

சாங்கி விமான நிலையத்தில் transit பகுதியில் உள்ள 270 வெள்ளி மதிப்புடைய கருப்பு கண்ணாடியை காணவில்லை.

இருப்பு கணக்கெடுப்பு அக்டோபர் 14 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது.அதன் பின் கண்ணாடி காணவில்லை என்பது தெரிய வந்தது.

CCTV கேமராவில் பதிவான காட்சிகளை விமான நிலையக் காவல்துறை ஆய்வு செய்தது.

கண்ணாடியைத் திருடியதாக சந்தேகப்படும் பெண்ணின் அடையாளம் CCTV கேமராவில் அடையாளம் காணப்பட்டது.

ஆனால் அவர் இவ்வாறு செய்த பிறகு சிங்கப்பூரை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
கடையில் இருந்து கண்ணாடியை எடுத்த பின் அந்த பெண் தனது சொந்த கண்ணாடியை அங்கு வைத்ததாகவும் அதற்காக அவர் கட்டணம் கூட செலுத்த வில்லை என்பது தெரிய வந்தது.

அவரை காவல்துறை சிங்கப்பூருக்கு டிசம்பர் .14 ஆம் தேதி திரும்பிய போது கைது செய்தது.

அவர் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.