ஆசியான் காற்பந்து போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து வெற்றி…!!!

சிங்கப்பூர்:ஆசியான் காற்பந்து வெற்றியாளர்களுக்கான போட்டியில் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின.

நேற்றைய (டிசம்பர் 17) ஆட்டத்தில் தாய்லாந்து 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய சிங்கப்பூர் அணி முதல் இரண்டு கோல்களை அடித்தது.

பின்னர் விழித்துக்கொண்ட தாய்லாந்து தொடர்ந்து நான்கு கோல்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தது.

A-பிரிவில் தாய்லாந்து 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.சிங்கப்பூர் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கம்போடியா மற்றும் மலேசியா 4 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன.

அரையிறுதிக்கு முன்னேற சிங்கப்பூருக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது.சிங்கப்பூர் அணி நாளை மறுநாள் (டிசம்பர் 20) மலேசியாவுடன் மோத கோலாலம்பூர் செல்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அல்லது டிரா செய்தால் சிங்கப்பூர் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.