மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்…!!!

மலேசியாவின் புரோட்டான் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார்...!!!

மலேசியாவின் புரோட்டான் நிறுவனம்
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் e.MAS 7 SUV ரக கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

எனவே மலிவான e.MAS 7 ரக கார் S$32,000 (105,800 ரிங்கிட்) விற்கப்படும்.

இந்த சொகுசு வாகனம் சுமார் S$37,500 (123,800 ரிங்கிட்) விற்பனை செய்யப்படுகிறது.

சீனாவின் BYD மற்றும் அமெரிக்காவின் டெஸ்லா ஆகியவற்றின் எலக்ட்ரிக் கார்கள் ஏற்கனவே மலேசியாவில் விற்கப்படுகின்றன.

மலேசிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2030 க்குள் புதிய கார் விற்பனையில் 20 சதவீதம் மின் கார்களாக இருக்கும் என்று தெரிவித்தது.

மலேசியாவின் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தரமான மின்சார வாகனங்களைத் தயாரிக்க e.MAS 7 EV ரக கார்கள் வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.