Singapore Job Vacancy New

சிங்கப்பூரில் போலி காலணிகளை விற்ற இருவர் கைது!

சிங்கப்பூரில் நேற்று போலி காலணிகளை விற்றதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்.இருவரும் 24,26 வயதுடையவர்கள்.

அவர்கள் 1,700 போலி காலணிகளை விற்றதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.

ஏப்ரல் 15-ஆம் தேதி சனிக்கிழமை அன்று bishan street 23 – லும்,yishun ring road – லும் குற்றப் புலனாய்வு துறை சோதனை நடத்தியது. அப்போது இருவரும் பிடிப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து அனைத்து போலி பொருட்களும் கைப்பற்றபட்டன.

அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

போலி பொருட்களை விற்பனைச் செய்வதும்,விநியோகிப்பதும் கடுமையான குற்றம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

விற்பனை நோக்கத்திற்காக போலி முத்திரைகள் பதிக்கப்பட்ட பொருட்களை வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 100,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

வாடிக்கையாளர்களிடமும், வணிகத்திலும் கொள்ளை லாபம் ஈட்டும் முயற்சி செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.